➤  News & Events அருள்மிகு ஆதி பால் முனீஸ்வரர் தல வரலாறு

Adhimunisvarar Temple

அருள்மிகு ஆதி பால் முனீஸ்வரர் ஒரு காவல் தெய்வம் ஆவார். இன்று அருள்மிகு ஆதி பால் முனீஸ்வரர் திருக்கோவில் அமைந்து உள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் சித்தர்கள் சப்த கன்னியர்களை பிரதிட்ஷை செய்து வழிபட்டு வந்தனர். இன்றளவும் வருடத்தின் சித்ரா பௌர்ணமி அன்று சித்தர்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபடுகின்றனர் மேலும் சித்தர்கள் சப்த கன்னியர்களின் அருள் சக்தி நிறைந்த இந்த இடத்தில் நிறைந்து இருப்பதால் இவ்விடத்தில் அருள்மிகு ஆதி பால் முனீஸ்வரர் தனக்கு ஓர் ஆலயம் அமைக்க ஸ்ரீ ஸ்ரீ ராஜேந்திர ஸ்வாமியிடம் அருள்மிகு ஆதி பால் முனீஸ்வரர் ஸ்ரீ ஸ்ரீ ராஜேந்திர ஸ்வாமியின் சிறு வயதில் அருள்மிகு ஆதி பால் முனீஸ்வரர் கனவில் காட்சி அளித்து தனக்கு ஒரு ஆலயம் இவ்விடத்தில் அமைக்க வேண்டும் என்று இவ்விடத்தை காண்பித்தார் இக்கனவை பற்றி தன் தாய் தந்தையரிடம் ஸ்ரீ ஸ்ரீ ராஜேந்திர ஸ்வாமி கூறினார். தாய் தந்தையுடன் அவ் ஊரில் உள்ள மிக பெரிய சித்தர் ஒருவரை சந்தித்தார் அவர் ஸ்ரீ ஸ்ரீ ராஜேந்திர ஸ்வாமியை பார்த்து இவருக்கு மிக பெரிய தெய்வ சக்தியிருப்பதாகவும் இவர் மிக பெரிய ஆலயம் எழுப்புவர் என்று கூறினார் நாட்கள் செல்ல செல்ல ஸ்ரீ ஸ்ரீ ராஜேந்திர ஸ்வாமி கனவுகள் மூலம் அருள்மிகு ஆதி பால் முனீஸ்வரர் தனக்கு ஆலயம் அமைக்க தொந்தரவு செய்து வந்தார். அப்போது ஒரு நாள் ஸ்ரீ ஸ்ரீ ராஜேந்திர ஸ்வாமி தன் வேலையினை முடித்துக் கொண்டு வீட்டுக்கு செல்லும் வளியில் ஒரு இடத்தில் வந்து வண்டி தினமும் நின்று விடும் அந்த இடத்தில் இறங்கி பார்க்கும் போது அருள்மிகு ஆதி பால் முனீஸ்வரர் காட்சி அளித்தார் அங்கு தனக்கு ஆலயம் அமைக்க கட்டளை இட்டார் கட்டளைக்கேட்ப அருள்மிகு ஆதி பால் முனீஸ்வரர்க்கு ஸ்ரீ ஸ்ரீ ராஜேந்திர ஸ்வாமி ஆலயம் ஏழுப்பி அருள்மிகு ஆதி பால் முனீஸ்வரர் அருள்வாக்கை மக்களுக்கு வழங்கி வருகிரார்  Read More